சனி, 9 அக்டோபர், 2010

லாச்சப்பலில் புதிய என்திரன்


லாச்சப்பலில் புதிய என்திரன் ...

லா சப்பல் எனப்படும் தமிழர்கள் அதிகமாக சேரும் பகுதியில் உள்ள ஒரு பிரபல சாப்பாட்டுக் கடையில் புரோட்டா போடும் நபர் ஒருவர் இருக்கிறார். அங்கே அதிகமாக புரோட்டா விற்பனையாகிறது..கூட்டம் பிச்சுகிட்டு போகுது..சமாளிக்க முடியாமல் அந்த நபர் ஒரு புதிய "ரோபோ" இயந்திரம் ஒன்றை தயாரித்து அது அதிகமாக மின்னல் வேகத்தில் பொரோட்டா போடுகிறது...அது ஒருதடவை மெனு காட்டை பார்த்தாலே மின்னல் வேகத்திலே ஒரு சாப்பாட்டை தயாரிக்கும் திறன் கொண்டது ..மற்ற கடைகளில் விற்பனை குறைந்து போகவே மற்ற கடை ஓனர்கள் சேர்ந்தது அந்த ரோபோ உடைய புரோகிராமை மாற்றிவிடுகிறார்கள்..அதன் பிறகு அந்த ரோபோ கெட்டுபோன சாப்பாடு, தீஞ்சுபோன சாப்பாடு, சாபிடமுடியாத புரோட்டா, இப்படி சாப்பாட்டு கடை ஓனருக்கு எதிராக செயல்படுகிறது...கதை சூடுபிடிக்கிறது... அதேநேரம் இந்த சாப்பாட்டை சாபிட்டு நொந்துபோனவர்கள் அந்த கடை ஓனரை கடையில் வைத்து சாத்து சாத்து என வெளுத்து "பெண்ட்" எடுகிறார்கள்...

இதே நேரம் அந்த ரோபோ புரோகிராம் இன்னும் வேகமாக செயல்பட்டு அதற்கு "பரோட்டா மேனியா" என்கிற வியாதி பிடிகிறது..அதனால் சும்மா இருக்க முடியாது..எந்த நேரமும் பரோட்டா போடா வேண்டும், கை கால் சும்மா இருக்க முடியாது..எங்காவது பரோட்டா போட பயன்படும் மா பையை கண்டால் தானே எடுத்து குழைத்து பரோட்டா போட ஆரம்பித்து விடும்..இதனால் பயந்துபோன சாப்பாட்டு கடை ஓனர் கடையை மூடிவிட்டு ஓட்டம் பிடிக்கிறார்.. ரோபோ தெருவில் இறங்கி கண்ணில் அகப்படும் சாப்பாட்டு கடைக்குள் நுழைந்து ஆட்களை அடித்து போட்டுவிட்டு மா பையை எடுத்து புரோட்ட போட ஆரம்பிகிறது...தெருவெல்லாம் ஒரே புரோட்டாவாக காட்சியளிகிறது.

லா சப்பல் ஏரியாவே பரோட்டாவாக காட்சியளிகிறது. எல்லா கடை ஓனர்களும் மா வாங்கவே பயப்படுகிறார்கள். இப்பொழுது ரோபோ க்கு வெறி பிடித்து தெருவில் இறங்கி கண்ணில் காணும் சூப்பர் மார்க்கட், அடையான் கடை, பாகிஸ்தானி கடை எல்லா இடத்திலும் ஆட்களை அடித்து அட்டகாசம் பண்ணிட்டு மா பையை மட்டும் வெளியே எடுத்து தெருவில் பரோட்டா போட ஆரம்பிகிறது..போற வார இடம் எல்லா இடத்திலும் ஒரே பரோட்டாவாக மாற பிரெஞ்சு அரசாங்கம் கடுப்பு ஆகிறது..

ரோபோவை உண்டாகிய போராட்ட மாஸ்டர் மெண்டல் ஆகி ரோட்டில் திரிகிறார்.. கடை ஓனர் தலை மறைவு ஆகிறார்.. நாடே ஸ்தம்பிச்சு போகிறது...இறுதியில் இந்த பரோட்டா போடும் ரோபோ எப்படி அளிக்கபடுகிறது என்பது சுவாரஸ்யமான கிளைமாக்ஸ்.

சனி, 14 மார்ச், 2009

இலவச மின்சாரம் தயாரிப்பது எப்படி?


தினமும் மின்சார சாதனங்களை உபயோகிப்பவர்கள்

மாசா மாசம் கரண்ட் காசு அதிகமாக வருகிறது என்று கவலைப்படுவதுண்டு. தமிழ் நாட்டில் அது மிகப்பெரிய பிரச்சனையாகவும் இப்பொழுது பேசப்படுகிறது. ஒவ்வொரு நாட்டு அரசாங்கமும் மின்சாரத்துக்காக பல லட்ச ரூபாய்களை இதற்காக செலவிடுகிறார்கள். நான் கீழே குறிப்பிடுள்ள முறையை பயன்படுத்தி ஒவ்வொருவரும் தாமாகவே தங்களது வீட்டு தேவைக்கு ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல் கரண்ட் தயாரிக்கலாம். அதற்கான திட்டம் கீழே.

இந்த திட்டத்துக்கு மொத்தமாக தேவைப்படுவது நன்கே நான்கு சாதனம் தான்.

ஒரு பெரிய சைஸ் மோட்டார்

(மோட்டார் ஆனது மிசாரத்தை செலுத்தினால் தானாகவே நிற்காமல் தொடர்சியாக இருபத்தி நன்கு மணிநேரமும் இயங்கக்கூடியது)

ஒரு பெரிய சைஸ் டைனமோ

(சாரணமாக டைனமோ என்பது அதன் பலமாக்சுற்றினால் அது மின்சாரத்தை தொடர்சியாக உற்பத்தி செய்து தரக்கூடியது. நம்ம ஊர் சைகில்களில் இது சாதரணமாக காணக்கூடியதாக இருக்கும். ஆனால் நமக்கு தேவை பெரிய சைஸ் டைனமோ)

இந்த இரண்டையும் இணைக்கும் ஒரு பெல்ட்

(நம்ம ஊரில் மிளகாய் மல்லி அரைக்க போகும் மில்லில் ஒரே ஒரு மோட்டாரில் பல அரைக்கும் இயந்திரங்களை ஒரு பெல்ட் மூலம்இணைத்து ஓடுவதை பார்த்திருப்பீர்கள். அதே போல மோடோர் மற்றும் டைனமோ இவற்றின் சுற்றும் பக்கங்களை ஒரே பெல்ட் இன் இணைக்கவேண்டும்)

ஒரு ட்ரான்ஸ் போமேர் (அதாவது மின் பெருக்கி)

(இலங்கை அல்லது இந்தியா போன்ற நாடுகளில் ஒரு பிரச்சனை என்றால் குண்டுவைத்து தகர்ப்பது இதைதான். எனவே இதைபற்றி எல்லாருக்கும் நன்றாகத் தெரியும். இதன் பயன்பாடு கொஞ்சமாக வரும் மிசாரத்தை அதிகமாக பல மடங்காக பெருக்கி குடுப்பது தான்)

சரி. இனி எவ்வாறு மின்சாரம் தயாரிக்கலாம் என பாருங்கள்.

முதலில் மோட்டார் மற்றும் டைனமோ இவைகளை ஒரே நேர்கோட்டில் வைத்து படத்தில் காட்டியபடி ஒரு பெல்ட் மூலம் இரண்டையும் இணைக்கவேண்டும். அதாவது மோட்டார் சுற்றினால் டைனமோவும் சுற்றும். இப்பொழுது என்னசெய்யவேண்டும் தெரியுமா? முதலில் கொஞ்சம் மின்சாரத்தை கொண்டு மோட்டார் ஐ இயங்கசெய்யவேண்டும். அப்பொழுது அதனுடன் இணைக்க பட்டிருக்கும் டைனமோ சுற்றும் பொது அது தானாக கரண்ட் உற்பத்தி செய்யும்.

( ரொம்ப சிரம படவேண்டாம். டைனமோவை கையால் சுற்றி விட்டாலும் போதும். அப்பொழுது கரண்ட் thaa

வெள்ளி, 6 மார்ச், 2009

குழந்தைகளை வீரமாக வளர்ப்பது எப்படி?










அன்பார்ந்த வாசகர்களே .....ஒவ்வொரு மனிதனுக்கும தனக்கு ஒரு வாரிசுவேண்டும் என்றும் அது வளர்ந்து பெரிய ஆளாகி எதிர்காலத்தில் தமக்கு கஞ்சிஊத்தவேண்டும் என்ற கனவு இருக்கும். இதில் தனது குழ்ந்தை எதற்கும்பயப்படாமல் வீரனாக வரவேண்டும் என்ற ஆசை இருக்கும். அதை சின்னவயதிலிருந்தே எப்படி கற்றுதர வேண்டும் என சில யோசனைகளை கீழேஎழுதியுள்ளேன்.

... ஒரு வயது ஆகாத குழ்ந்தைகள் நடக்க ஆரம்பிக்கும் போதே சில சமயம் கீழேவிழும். பின்னர் எழும்பி மீண்டும் நடக்க ஆரம்பிப்பார்கள். குழ்ந்தை எங்கேவிழுந்துவிடுமோ என பயந்து பயந்து தாய்மார் கண்ணும் கருத்துமாகஇருப்பார்கள். நான் கீழே சொல்லியிருப்பது போல செய்தால் அந்த பயம்இனிமேல் இருக்காது. முதலில் ஒரு சிறிய ஸ்டூல் அல்லது சிறிய மேசை மீதுகுழ்ந்தையை ஏற்றிவிட்டு கீழே தள்ளிவிடவேண்டும். அப்பொழுது சிறியதாகஅடிபட்டு அது அழும். அதை பொருட்படுத்தவேண்டாம். இதன் மூலம் அந்தகுழந்தைக்கு கீழே விழுந்தால் அடிபடும் அல்லது வலிக்கும் என இயல்பாகவேதெரிந்துவிடும். கொஞ்சம் வளர வளர பெரிய மேசையிலிருந்து இப்படிதள்ளிவிட்டால் உங்கள் குழந்தை இயல்பாகவே அந்த அனுபவத்தைபெற்றுவிடும். இதன் மூலம் சிறிய வயதிலிருந்தே வலியை தாங்கும் சக்தியும்கிடைக்கும். ஒரு குறிப்பிட்ட நாட்கள் கழித்து குழந்தை கடைசிவரை கீழே அல்லதுநடக்கும் போதோ கீழே விழாது. அம்மாக்கள் ஜாலியாக அவர்கள் வேலையைபார்க்கலாம். எதிர் காலத்தில் யாரையும் நம்பி ஒரு காரியத்தில் இறங்கக்கூடாதுஎன்ற அனுபவம் அனுபவரீதியாகவே உங்கள் குழந்தைக்கு கிடைக்கும்.

குறிப்பு. ஸ்டூல் அல்லது மேசை கிடைக்காதவர்கள் குழந்தை நடக்கும்போதுகாலை தட்டிவிடவும். ஆனால் புல்லு உள்ள இடமாக பார்த்து காலைதட்டிவிட்டால் அதிகமாக அடி படாது.

குழந்தைக்கு சாப்பாடு கொடுக்கும் பொழுது எப்பவுமே இனிப்பு வகைசாப்பாடுகளை கொடுக்கும்போது இடையில் மிளகாய் கொடுத்தால் காரம்என்றால் என்ன என்பது தானாகவே குழைந்தைக்கு தெரியும். எதிகாலத்தில்நிறைய காரம் சாப்பிடும் பழக்கமும் கோபம் வரும் தன்மையும் கிடைக்கும்.

வெள்ளி, 6 பிப்ரவரி, 2009

உழைக்காமல் கோடீஸ்வரன் ஆவது எப்படி..ஐடியா நம்பர் இரண்டு

அத ஏன் கேக்குறீங்க. உழைக்காமல் கோடீஸ்வரன் ஆவது என்கிற எனது முதல் திட்டம் பற்றி நிறைய வாசகர்கள் தங்களது நன்றியையும் சந்தோசத்தையும் பகிர்ந்துகொண்டதோடு இது போல நிறைய எழுதசொல்லி அன்பு மடல்கள் நிறைய. எனவே எனது இரண்டாவது ஐடியாவையும் இதன் மூலம் எழுத விரும்புகிறேன்.

திட்டம் நம்பர் இரண்டு.

ஐடியா நம்பர் ஒன்றில் குறிப்பிட்டது போல பிச்சை எடுத்து பெரிய ரிஸ்க் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த ஐடியா ரொம்ப சிம்பிள். முதலில் கடுமையாக உழைக்க கூடாது என்ற சிந்தனையை நன்றாக மனதில் கொண்டபின்னர் இதை செயற்படுத்தவும். நீங்கள் செய்ய வேண்டியது இதுதான். ஆரம்பத்தில் உங்களுக்கு நன்றாக தெரிந்த ஒருவரிடம் ஆயிரம் ரூபாய் கடன் வாங்குங்கள். அடுத்த மாதம் ஒரு குறிப்பிட்ட திகதியில் திருப்பி தருவதாக வாக்குறுதி கொடுங்கள். அடுத்த மாதம் இதே போல் வேறு ஒரு நபரிடம் இரண்டாயிரம் ரூபாய் கடன் வாங்கி அதில் ஆயிரம் ரூபாயை முதல் மாதம் கடன் வாங்கியவரிடம் சொன்ன திகதிக்கு முன்னர் திருப்பி கொடுத்துவிடுங்கள். பிறகு இன்னொருவரிடம் மூவாயிரம் ரூபாய் கடன் வாங்கி அதில் இரண்டாயிரம் வாங்கியவரிடம் அதை திருப்பி கொடுப்பதுடன் ஆயிரம் ரூபாயை நம் கை செலவுக்கு வைத்து கொள்ளலாம்.
பிறகு இன்னொரு ஆளிடம் (அல்லது ஏற்கனவே கடன் வாங்கியவரிடம் ) மீண்டும் ஐயாயிரம் ரூபாய் வாங்கி நாலாயிரத்தை கொடுத்துவிட்டு ஆயிரத்தை செலவு செய்து கொண்டு இதே போல் ஜாலியாக இருக்கலாம்.
ஏன் சரியான திகதியில் திருப்பி கொடுக்க வேண்டும் தெரியுமா? அப்பத்தான் அடுத்த மாதம் அதே நபரிடம் மீண்டும் கடன் கேட்கும்பொழுது நம்ம நாணயத்தை பார்த்து பெரிய தொகை கடனாக தருவார். துளி கூட நம்ம மேல் சந்தேகம் வராது.
இதேபோல் ஒவ்வொருவரிடமும் மாதா மதம் கடன்வாங்கி போன மாதம் கட வாங்கியவருக்கு சொன்ன நேரத்துக்கு பணத்தை திருப்பி கொடுப்பதுடன் நம்ம கை செலவுக்கும் வைத்துக்கொண்டு ஜாலியாக செலவு செய்யலாம்.
இப்படியே ஆயிரம், இரண்டாயிரம் என ஆரம்பித்து லச்சம் ரூபாய் வரை சாதாரணமாக கடன் வாங்கி ஜாலியாக இருங்கள். உங்களுக்கு போரடித்தால் ஒரு இருபது லச்ச ரூபாயை கடன் வாங்கிவிட்டு அதில் ஒரு ஏஜென்சி யை பிடித்து கனடா அல்லது லண்டன் போன்ற ஒரு நாட்டுக்கு கம்பி நீட்டிவிட வேண்டியது தான்.
யாரால் என்ன பண்ண முடியும்? இல்லன்னா ஒரு பேங்க் ல கடன் வாங்கிட்டு அப்புறம் மஞ்ச கடுதாசி குடுக்கலாம். பல வழிகள் இருக்குங்க.
வெட்டி பய அல்லதுவேலை இல்லாதவங்க தான் மாச சம்பளத்துக்கு வேலைக்கு போவாங்க. நமக்கு தான் ஐடியா இருக்கே அப்புறம் என்ன? தூள் கிளப்புங்க. ...
வாழ்த்துக்கள்.

டூரிஸ்ட் பைட்டர் ஒரு திரைக்கதை


எனது நீண்ட கால கனவாக ஒரு பக்கா திரில் திரைக்கதை அமைக்க வேண்டும் என்ற எனது தீராத ஆசையை இதன் மூலம் நான் நிறைவேற்றிக்கொள்ள போகிறேன். எனக்கெல்லாம் எவன் சார் சான்ஸ் குடுப்பான். எனவே நானே இதை உண்டாகியிருகிறேன். தொடர்ந்து படியுங்கள்.

ஒரு பக்கா கிராமம். பாரதிராஜா திரைப்படத்தில் வரும் ஒரு கிராமத்தை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளவும். அங்கே தான் சார் நம்ம கதையோட ஹீரோ இருக்காரு. என் ராசாவின் மனசிலே படத்தில் வரும் ராஜ்கிரண் போல ஒரு தடித்த முறுக்கேறிய ஹீரோ. அவனுக்கு மிகுந்த நாட்டு பற்று சார். ஆனா பாருங்க அவருக்கு வெளிநாட்டு காரங்க அதாவது டூரிஸ்ட் யாருமே கண்ணிலேயே காட்ட கூடாது. அவ்வளவு வெறுப்பு. யாரவது ஒரு வெள்ளைக்காரனை கண்டுவிட்டால் போதும் உடனே தனது கூட்டாளிகள் சகிதம் அவர்களை உண்டு இல்லை என ஆக்குவதுடன் சில நேரம் டூரிஸ்டுகளை காலி பண்ணிவிடுவார்கள். இதனால் அந்த கிராமத்தில் கொலைகள் அடிக்கடி நடக்கும். வெள்ளை காரர்கள் அங்கங்கே முண்டமாகவோ வெட்டு காயங்களுடன் கிடப்பார்கள்.



போலீஸ்காரர்களுக்கு நிரந்தர தலைவலி தான். யார்ரா இந்த மாதிரி ஒரு லூசு பய வெள்ளை காரங்ககளை மட்டும் கொன்று நமக்கும் நாட்டுக்கும் பிரச்சனையை உண்டாகுறான்..அவன் நோக்கம் என்ன ஏன் இப்படி பண்ணுறான்னு தெரியலை என்று உயரதிகாரிங்க அவசர மீட்டிங் போடுறாங்க.

இந்த சீன்ல நாங்க டெல்லிய காட்டுறோம். பெரிய அதிகாரி நிறைய போலீஸ் அதிகாரிகளுடன் பேசுகிறார். ''அமேரிக்கா கனடா இப்படி பல நாட்டு தூதரகங்கள் நம்மளை கூப்பிட்டு என்ன நடக்குது இந்தியால ? இறந்து போனவங்க அல்லது காணாமல் போனவங்க பற்றி என்ன நடவடிக்கை எடுதீங்கனு உயிரை எடுகிறாங்க. எனிவே வீ வில் டூ சம்திங் இம்மீடியட்''..



பத்திரிக்கை காரங்க மீடியா ஆளுங்க நிறைய பேர் அதிகாரிகளை கேள்வி மேல கேள்வி கேட்டு சாகடிகிறாங்க. அதிகாரி அவரசரமா கார்ல போகிறார்.



தமிழ் நாடு அரசுக்கு டெலிபோன் பாக்ஸ் பறந்து வருது. விஜய காந்த் அல்லது அர்ஜூன் இல்லன்னா எஸ். ஜெ. சூர்யா இவங்க மூணு பேர்ல ஒருத்தரை ஸ்பெஷல் அதிகாரியா போடலாம்னு டிஸ்கஷன் நடக்குது.


அதே நேரம் கிராமத்த காமிக்கிறோம். நம்ம ஹீரோவுக்கு ஒரு பேர் வைப்போம். இம்சைராஜ் .. இம்சைராஜ் கு பத்து அண்ணன் தங்கசிங்க. பெரிய குடும்பம். அவங்க அப்பன் எந்த வேலைக்கும் போறதில்லை. சாப்பாட்டுக்கே வழியில்லை . குடும்பமே நாடு ரோட்ல நிக்குது. நம்ம இம்சைராஜ் நண்பர்களுடன் ஜாலியா அரட்டை அடிக்கிறார். போறவங்க வரவங்களை கிண்டல் பண்ணுறார். வீட்டுக்கு வந்து சாப்பாடு போடசொல்லி அவன் அம்மாவை அடிச்சு உதைக்கிறார். அடி தாங்காமல் அவங்க அம்மா மயக்கமாகிறார்.



இப்போ சீன் மாறுது. ஏன் நாம ஹீரோ இம்சைராஜ் வெள்ளை காரங்களை பிடிக்கலை அல்லது வெறுக்கிறார் என்பதற்கு ஒரு பிளாஷ்பேக் அவசியம் இல்லையா? ஒருநாள் நம்ம ஹீரோ இமசைராஜ் அவங்க அம்மா வயித்து வலியால் துடிகிறாங்க. மாத்திரை வாங்க ஒவ்வொரு ஆளிடமும் காசு கேட்கிறான். யாருமே குடுக்கலை. பிச்சை கூட கேட்டுபார்கிறான். யாருமே தரலை. சோகமாக வந்து ஒரு டீக்கடையில் உட்காருகிறான்.





அப்பொழுது ஒரு காட்சி. ஒரு அமெரிக்கன் டூரிஸ்ட் அந்த டீக்கடைக்கு வந்து ஒரு கோககோலா கூல்ட்ரிங்க்ஸ் வாங்குகிறார். அதை உடச்சு அதிலேயே மூஞ்சி கழுவி வாய் கொப்பளிக்கிறார். இதை பார்த்த நம்ம இம்சைராஜ் கடுப்பாகிறார். பெத்த தாய்க்கு மாத்திரை வாங்க காசு இல்லைன்னு நானே இருக்கும்போது நம்ம நாட்டுக்கு வந்து ஒரு வெள்ளைக்கார நாய் கோகாகோலவிலே மூஞ்சி கழுவுரானே? என்ன திமிர்? செம்ம டென்சன் ஆகி பக்கத்தில் இருந்த கோககோலா போத்தலை எடுத்து அவன் மண்டையில் ஒரே போடு. ஆள் காலி.



அதுக்கு அப்புறம் எந்த வெள்ளைகாரனை பார்த்தாலும் கொன்னுடனும் என்று ஒரே வெறி. நிறைய டூரிஸ்டுகள் இவனால் காலிபண்ண பட்டவர்கள். நிறைய சீன் காமிக்கலாம் என நினைக்கிறன். இன்னும் முடியலை. தொடரும்....

கல்யாணம் ஒரு சப்பை மேட்டர்


முட்டையிட்ட கோழிக்கு தான் தெரியுமாம் ......எரிச்சல் என்பது போல கல்யாணம் பண்ணினவுனுக்கு தான் அந்த துன்பம் எல்லாம். காதலிக்கும் போது எவ்ளவு ஜாலியாக இருக்கும் ஆனால் சில நாட்கள் கழிந்தபின்னர்

ஏண்டா இந்த தப்பை பண்ணிட்டோமே கொஞ்சம் யோசிச்சு இருக்க கூடாதா? இன்னும் கொஞ்சம் வெயிட் பண்ணியிருந்தா நல்ல பிகரை மடக்கியிருக்கலாமே. இப்படியெல்லாம் யோசிக்க வேண்டியிருக்கும்.



கீழே நான் சொல்லியிருப்பது போல நல்ல ஐடியா க்களை நீங்கள் செய்தால் கல்யாணம் என்பது பாரம் போல இருக்காமல் ஜாலியாக இருக்கும்.



உதாரணமாக நீங்கள் கல்லூரியில் படிப்பவர் என வைத்துக்கொண்டால் அங்கே ஒரு மொக்கை பிகரை கஷ்டப்பட்டு மடகிவிட்டீர்கள் என வைத்துகொள்வோம். இப்போ காபி ஷாப், கிளப் , சினிமா, பீச் இதுபோன்ற இடங்களுக்கு கூடிபோகும் பொழுது சில நேரம் நீங்கள் பணம் கொடுப்பீர்கள். சில நேரம் பிகர் கொடுக்கும். இப்போ உங்களுக்கு செலவு ஒரு பாரமாக இருக்காது. காரணம் அந்த பிகருக்கு அவங்க அம்மா அப்பா சாப்பாடு, உடுப்பு, தங்குமிடம் எல்லா செலவும் அவங்களே பார்துகொல்வதால் காதல் அல்லது சைட் அடிப்பது ஆண்களுக்கு ரொம்ப சுலபம்.



நம்ம சும்மா வெளிய கூட்டி போனால் போதும். பெரிய செலவு இல்லை அத்துடன் பாரமாகவும் இருக்காது. இதே போல கல்யாணம் ஆனபின்னும் அந்த பெண்ணிற்கு சாப்பாடு, உடுப்பு, தங்குமிடம் உட்பட எல்லாத்தையும் அவங்க அப்பா அப்பவே பார்க்கவேண்டும், நமக்கும் நம்ம வீட்ல எல்லாமே தந்துடுவாங்க.



எனவே , சும்மா சைட் அடிப்பது போல டெய்லி வெளியே வந்து இருவரும் சுத்திவிட்டு இரவுக்கு முன்னர் வீடு திரும்பினால் போதும். அவங்க வீட்ல அவளுக்கு சாப்பாடு நம்ம வீட்ல நமக்கு சாப்பாடு.மற்ற விசயங்கள் அப்புறம் பேசிக்கலாம். இப்படி ஒரு மாற்றம் வந்தால் கல்யாணம் செய்வது ஒரு சப்பை மேட்டர்.



நான் சொன்னது போல ஐடியா இருந்தால் கல்யாணம் ஒரு பாரமாக தெரியாது. பெரிசா கஷ்டப்படு உழைக்கணும், குடும்பத்த முன்னேர்ரனும் என்கிற பெரிய ரிஸ்க் எடுக்க தேவையில்லை. அவங்க வீட்ல எல்லாம் அவளுக்கு பாத்துக்குவாங்க . நம்ம ஜாலிய கல்லூரி மாணவன் போல கல்யாணம் கட்டிய பிறக்கும் ஜாலிய வாழ்கைய என்ஜாய் பண்ணலாம்.

செவ்வாய், 3 பிப்ரவரி, 2009

உழைக்காமல் கோடீஸ்வரன் ஆவது எப்படி ?

ஒவ்வொரு மனிதனுக்கும் பணம் தற்போதைய வாழ்க்கையில் தேவை அல்லவா? இதில் எவ்வளவு பேர் கடுமையாக உழைத்து முன்னுக்கு வரவேண்டும் என்று யோசிக்கிறார்கள்? அப்படி எல்லாரும் நினைப்பதானால் லாட்டரி சீட்டு கடைகளும் கபே கடைகளில் உள்ள சுரண்டல் லாட்டரிகளும் எதற்காக? எவ்வளவுபேர் கியூவில் நின்று கடுமையாக உழைத்தது லாட்டரி சீட்டு வாங்குகிறார்கள். எனவே பணம் தான் முக்கியம். எனவே எந்த விதமமான கஷ்டமும் படாமல் கோடீஸ்வரன் ஆகலாம். அதற்கான திட்டம் கீழே.

உதாரணமாக நீங்கள் வசிக்கும் நாட்டில் எவ்வளவு மக்கள் தொகை என்பது இத்திடத்தின் முக்கியமாம அம்சம். உதாரணமாக ஐந்து கோடிபேர் உள்ள நாடு என வைத்துக் கொள்வோம். கனடா என ஒரு பேச்சுக்கு வைத்துகொண்டாலும் அங்கே உள்ள மக்கள் தொகை சுமார் ஐந்து கோடி பேர். அதிலே பாதிப்பேர் வரை ஒரு பிச்சைகாரனுக்கு குறைந்தபட்சம் ஒரு ரூபாயாவது பிச்சை போடும் குணமும் தாரள மனதும் நிச்சயம் இருக்கும். அதாவது இரண்டரை கோடி பேர் நிச்சயம் தருவார்கள். இதுதான் நமது திட்டத்தின் ஆரம்ப மையம். தினமும் நாம் குறைந்தபடம் பாத்து பேரிடம் ஒரு ஒரு ரூபாய் படி பிச்சை எடுக்க வேண்டும். இதில் பன்னிரண்டு ரூபாய் எடுத்தால் அதில் இரண்டு ரூபாயை சொந்த அன்றாட செலவுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். எனவே ஒருநபரிடம் ஒரு ரூபாய் படி இரண்டரை கோடி பேரிடமும் நாம் பிச்சை எடுத்தால் ஒரு குறிபிட்ட காலத்தில் இரண்டரை கோடி ரூபாய்க்கு அதிபதி ஆகலாம். பின்னர் இந்த்த பணத்தை பாங்கில் போட்டு வட்டிக்கு விடுவதன் மூலமும் அல்லது தினசரி வட்டி, மீட்டர் வட்டி, கந்து போன்ற அரகாரியங்கள் மூலமும் நாம் அந்த இரண்டரை கோடி ரூபாயை மேலும் மேலும் பன்மடங்கு ஆக்கலாம்.

இத்திட்டத்தினால் உள்ள பயன்கள்...

... ஒவ்வொரு மனிதனும் இதன் மூலம் கோடீஸ்வரன் ஆகலாம் என்பதுடன் அடுத்து அடுத்து பிச்சை கேட்க வருபவருக்கு தினசரி ஒரு ரூபாயை அளிப்பதன் மூலம் அவர்களையும் கோடீஸ்வரன் ஆக்கலாம்.

...பிச்சை எடுப்பது என்ற சிறிய வேலையை தவிர வேறு எந்த வேலையும் செயவேண்டிய அவசியம் இல்லை.

...பிச்சை எடுத்துக்கொண்டே பணக்காரன் ஆகவும் மாறிவிடுவதால் ஒருவன் பணக்காரனா அல்லது பிச்சைகாரனா என்ற சந்தேகத்தை சமுதாயத்துக்கு ஏற்படுத்துவதன் மூலம் பிச்சைக்காரன் என்ற சொல்லை இல்லாமல் ஆக்க முடியும்.

... நாட்டில் பண புழக்கம் அதிகமாகும்.

... தினசரி நாம் யாரோ ஒருவருக்கு ஒரு ரூபாய் பிச்சை போடுவதன் மூலம் ஐயோ என்னுடைய இரண்டரை கோடியிலிருந்து பணம் குறைகிறதே என்று கவலை படத்தேவையில்லை. காரணம் பாங்கு வட்டியிலிருந்து தான் நீங்கள் பிச்சை போடப் போவதனால் காசு எக்காரணம் கொண்டும் குறையாது.

... பிச்சை எடுக்கும் பொது பல வேசங்கள் பாசை கல் பேச வேண்டி வரும் என்பதால் ஒரு நடிகனாக அல்லது நல்ல பேச்சு ஆற்றல் உள்ளவனாக வர வாய்ப்புகள் உண்டு.

... விதவிதமான இடங்களும் சாப்பாடுகளும் கிடைக்கும். இது எக்ஸ்ட்ரா போனஸ்.

இத்திட்டத்தினால் உள்ள தீமைகள்..

... பிச்சைக்காரன் என யாரவது சொல்லிவிடலாம் என்ற கவுரவ குறைச்சல் ஏற்படலாம்.

... உங்களுக்கு நடிக்க தெரியாது விட்டாலும் பிச்சை எடுப்பது போல நடிக்க வேண்டி வரும்.

... ஊனமுற்றவர் போல நடிக்க வேண்டி வந்தால் சில நேரம் கை கால் வெட்டு காயங்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

...கோடீஸ்வரன் ஆவது என்று முடிவுகட்டிவில்லால் அதற்காக கடுமையாக உழைப்பதை தவிர எந்த ரிஸ்க் எடுக்கவும் தயாராக இருக்கவேண்டும்.

மற்றபடி இத்திட்டத்தின் படி பார்த்தால் கோடீஸ்வரன் ஆவது பெரிய நாசாவுக்கு சாடிலைட் அனுப்பும் கம்ப சூத்திரம் இல்லை. சப்பை மேட்டர்.

திங்கள், 2 பிப்ரவரி, 2009

இனி கார் தேவையில்லை

என்னத்தை பற்றி எழுதலாம் என யோசித்தபோது சமுதாயத்துக்கு ஏதாவதுஅறிவுரை சொல்கிறேன் பேர்வழி என சீரியசான விசயங்களை எழுதி போரடிக்கஎனக்கு விருப்பமில்லை. சும்மனாச்சுக்கும் எனக்கு கொஞ்சாம் காமெடியானஐடியாக்கள் சாதாரணமாக வரும். எனக்கு மட்டுமே ஏன் இப்படி தோன்றுகிறதுஎன்று தெரியவில்லை. முதல் கட்டமாக ஒருசில ஐடியாக்களை இதன் மூலம்எழுத விரும்புகிறேன்.

உலகத்தில் ஏற்பட்டுள்ள வெப்பமயமாதல் பிரச்சனைக்கு வாகனக்களிளிருத்ந்து வெளியேறும் அதிகளவு புகை தான் காரணம் என சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். எனவே இந்த வாகனக்களிருந்த்து வெளியேறும் புகையினை கட்டுப்படுத்தி எரிபொருள் செலவை எவ்வாறு குறைப்பது என யோசித்தேன். கொஞ்சம் செலவு பிடிக்கும் திட்டம் என்றாலும் ஒருதடவை முதலீடு செய்தால் வாழ்நாள் முழுவதும் வாகனங்களால் புகையும் வராது என்பதோடு வெப்பமும் கூடாது. என்ன திட்டங்கள் என்று பார்ப்போமா?

ஐடியா நம்பர் ஒன்று.
இப்போது உள்ள சாலைகளை இடித்து விட்டு நான் கீழே சொல்வது போல மாற்றி அமைக்க வேண்டும். ஒரே ரோட்ல போற வாகனமும் வர்ற வாகனமும் ஒரே நேரதில வர்றமாதிரி அமைக்க கூடாது. இரண்டையும் தனித்தனியா அமைக்கணும். உதாரணமா நீங்கள் மலை உச்சியிலிருந்து சைக்கிளில கீழே வரனுமுன்ன எப்படி வருவீங்க ? காலால பெடலை மிதிக்காமல் இறக்கத்தில ஜம்முனு எவ்வளவு வேகமா வருவீங்களோ அதே ஐடியாதான் .

இப்போ உதாரணமா மதுரையிலிருந்து சென்னை வரை வர்ற ரோட்ல சுமார் ௨00 கி மீ என்று வையுங்கள் . எந்தவிதமான வளைவும் வரக்கூடாது. (வளைவு ன்ன தமிழில பெண்டு அல்லது டர்நிங்). ஒரே நேர் ரோடாஇருக்கணும். ரோடின் சாய்வு அமைவு விகிதம் சுமார் ௨00 செ மி தாழ்வு ஒரு கி மீ என்று வைத்து கொண்டாலும் ௨00 மீட்டருக்கும் சுமார் இரண்டு மீட்டர்சாய்வுதான் (ஸ்லோப்) தேவை. எனவே ஏற்கனவே உள்ள பழைய ரோடை இடித்து விட்டுபோவதற்கு தனி வழியும் வருவதற்கு தனி வழியும் உள்ள இருவழி பாதைஅமைக்க வேண்டும். அவ்வளவுதான். உதாரணத்துக்கு மதுரையில் இருந்துசென்னை வரை செல்லும் ரோடை எடுத்துகொள்வோம். அல்லதுநியுயோர்க்கிலிருந்து கனடா வரை அல்லது சுவிசிலிருந்து ஜெர்மன் வரை எனஎந்த இடத்துக்கும் இந்த திட்டம் பொருந்தும்.

மதுரையில் ரோடு தொடங்கும் இடத்தை தரையில் இருந்து சுமார் மூன்று மீ உயரத்தில் ஒரு பாலம் போல சென்னைவரை ஸ்லோப் ஆக அமைக்க வேண்டும். அதில் தொடங்கி சென்னைவரை ௨00 செ மி சாய்வு இறக்கத்தில் (மலையில் இருந்து சைக்கிளில்இறக்கத்தில் பெடலை மிதிக்காமல் வருவது ஞாபகம் இருக்கட்டும் ) எனவே நீங்கள் ஆக்சிலேட்டரை மிதிக்காமல் சும்மா இச்டீரிங்கை திருப்பினால் போதும். ஏன் என்னுடைய திட்டப்படி வாகனம் பள்ளத்தில் செல்ல கூடியது என்பதால் இனிகாரே தேவையில்லை. கார் வாங்கும் காசு மிச்சம். ஒவ்வொரு சைக்கில்வாங்கினால் போதும்.
இது இப்படியிருக்க உங்களுக்கு சில சந்தேகங்கள் வரலாம் . அதாவது ரோடுதொடங்குமிடமான மதுரையில் ரோடு மூன்று மீ உயரத்தில் இருப்பதால் எப்படிகாரை மேலே கொண்டுபோவது என்பது தானே? அதற்கும் வழி உள்ளது. ரோடுதொடங்குமிடத்தில் ஒரு லிப்ட் ஒன்றை வைத்து வரும் வாகனங்களைவரிசையாக மேலீ ஏற்றலாம் . அவளவுதான் அதன் பின்னர் கார் ஒவ்வொன்றும்பெட்ரோல் இல்லாமல் புகை இல்லாமல் செலவு இல்லாமல் போகும். இதற்கிடையே இடையில் ஏதாவது இடத்தில் திரும்பி வேறு ஒரு ஊருக்கு செல்லவேண்டும் என்றாலும் இதே சிஸ்டம் தான். இடையில் ரோடு பிரிந்து இதேபோல்பள்ளமாக செல்ல வேண்டிய இடத்திற்கு செல்லும்.

சென்னையில் இருந்து மதுரை வரும் ஐடியாவும் இதேபோல் தான். முதலில்இத்திட்டத்தை பெரிய நகரங்களுக்கு அறிமுகபடுதியதன் பின்னர் படிப்படியாகபிற ஊர்களுக்கும் விஸ்தரிக்கலாம். ஒருவேளை கன்யாகுமரிவரை இதேபோல் பள்ளமான ரோடில் வரும் வாகனம் மதுரையில் இறங்கவேண்டும் என்றால் மதுரை லிப்ட் பாயிண்டில் நின்று லிப்ட் மூலம் கீழே இறங்கலாம்.

இத்திட்டத்தில் உள்ள சாதமான விடயங்கள்.
.. கார் வாங்கவேண்டிய செலவு மிச்சம்.
.. சுமார் இரண்டாயிரமா ரூபாயில் ஒரு சைக்கில் வாங்கினால் போதும்.
.. ரிப்பேர் செலவு, பெட்ரோல் செலவு, டிரைவர் செலவு மிச்சம்.
.. லைசென்ஸ் வாங்கவேண்டியதில்லை.
.. ஆண், பெண் , குழைந்தைகள் அனைவரும் நினைத்தவுடன் தனியாக சென்னை அல்லது வேண்டிய இடம் செல்லலாம்.
..போலீஸ்,மாமூல், இதர தொல்லைகள் குறையும்.
..எல்லாரிடமும் வாகனம் இருக்கபோவதால் ஏழை பணக்காரர் ஏற்றத்தாழ்வு குறையும்.
.. எல்லா வாகனமும் வரிசையாக பள்ளத்தில் பாலத்தில் செல்வதால் கடத்தல், தப்பி ஓடுதல் , போன்றவை செய்ய முடியாது.

இத்திட்டத்தினால் ஏற்படும் பாதகமான விஷயங்கள்.

.. பெரிய கார் கம்ப்பெனி முதலாளிகள் தொழிலதிபர்கள் கார் தொழிற்சாலைகளை மூடிவிட்டு வீடிற்கு போகவேண்டிவரும். எனவே எனக்கு கொலை மிரட்டல்கள் வரும்.
.. செலவு பிடிக்கும் திட்டம் என்பதால் சுமார் பல ஆயிரம் கோடி ரூபாய்கள் தேவைப்படும்.
.. அரசியல்வாதிகள் தங்கள் இஸ்டத்திற்கு பலநூறு கார்களில் பவனி வந்து பந்தா காடமுடியாது என்பதால் நிச்சயம் எனக்கும் இத்திடதிற்கும் எதிர்ப்புகள் வரும்.
.. வாகனம் யாவும் பள்ளத்தில் செல்வதால் நினைத்தவுடன் பிரேக் அடிக்க முடியாது.


அடுத்து பாரம் சுமக்கும் கனரக வாகனங்களால் புகை வருவது கூட என்பதால்பொருட்களை வாகனமே இல்லாமல் வேண்டிய இடத்திற்கு கொண்டுசெலும்திட்டமும் இருக்கு. அது அப்புறம் பார்க்கலாம். கருத்தை எழுதுங்க ஆனால்அடிக்க வராதீங்க.

இனிதான் ஆரம்பம்

தமிழில் என்னவென்று எழுதுவது என்பது இன்னும் சரியாக தெரியவில்லை . அதுக்கு அப்புறம் உங்களுக்கு அலுப்புதான். இது ஆரம்பம் தான்