வெள்ளி, 6 பிப்ரவரி, 2009

டூரிஸ்ட் பைட்டர் ஒரு திரைக்கதை


எனது நீண்ட கால கனவாக ஒரு பக்கா திரில் திரைக்கதை அமைக்க வேண்டும் என்ற எனது தீராத ஆசையை இதன் மூலம் நான் நிறைவேற்றிக்கொள்ள போகிறேன். எனக்கெல்லாம் எவன் சார் சான்ஸ் குடுப்பான். எனவே நானே இதை உண்டாகியிருகிறேன். தொடர்ந்து படியுங்கள்.

ஒரு பக்கா கிராமம். பாரதிராஜா திரைப்படத்தில் வரும் ஒரு கிராமத்தை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளவும். அங்கே தான் சார் நம்ம கதையோட ஹீரோ இருக்காரு. என் ராசாவின் மனசிலே படத்தில் வரும் ராஜ்கிரண் போல ஒரு தடித்த முறுக்கேறிய ஹீரோ. அவனுக்கு மிகுந்த நாட்டு பற்று சார். ஆனா பாருங்க அவருக்கு வெளிநாட்டு காரங்க அதாவது டூரிஸ்ட் யாருமே கண்ணிலேயே காட்ட கூடாது. அவ்வளவு வெறுப்பு. யாரவது ஒரு வெள்ளைக்காரனை கண்டுவிட்டால் போதும் உடனே தனது கூட்டாளிகள் சகிதம் அவர்களை உண்டு இல்லை என ஆக்குவதுடன் சில நேரம் டூரிஸ்டுகளை காலி பண்ணிவிடுவார்கள். இதனால் அந்த கிராமத்தில் கொலைகள் அடிக்கடி நடக்கும். வெள்ளை காரர்கள் அங்கங்கே முண்டமாகவோ வெட்டு காயங்களுடன் கிடப்பார்கள்.



போலீஸ்காரர்களுக்கு நிரந்தர தலைவலி தான். யார்ரா இந்த மாதிரி ஒரு லூசு பய வெள்ளை காரங்ககளை மட்டும் கொன்று நமக்கும் நாட்டுக்கும் பிரச்சனையை உண்டாகுறான்..அவன் நோக்கம் என்ன ஏன் இப்படி பண்ணுறான்னு தெரியலை என்று உயரதிகாரிங்க அவசர மீட்டிங் போடுறாங்க.

இந்த சீன்ல நாங்க டெல்லிய காட்டுறோம். பெரிய அதிகாரி நிறைய போலீஸ் அதிகாரிகளுடன் பேசுகிறார். ''அமேரிக்கா கனடா இப்படி பல நாட்டு தூதரகங்கள் நம்மளை கூப்பிட்டு என்ன நடக்குது இந்தியால ? இறந்து போனவங்க அல்லது காணாமல் போனவங்க பற்றி என்ன நடவடிக்கை எடுதீங்கனு உயிரை எடுகிறாங்க. எனிவே வீ வில் டூ சம்திங் இம்மீடியட்''..



பத்திரிக்கை காரங்க மீடியா ஆளுங்க நிறைய பேர் அதிகாரிகளை கேள்வி மேல கேள்வி கேட்டு சாகடிகிறாங்க. அதிகாரி அவரசரமா கார்ல போகிறார்.



தமிழ் நாடு அரசுக்கு டெலிபோன் பாக்ஸ் பறந்து வருது. விஜய காந்த் அல்லது அர்ஜூன் இல்லன்னா எஸ். ஜெ. சூர்யா இவங்க மூணு பேர்ல ஒருத்தரை ஸ்பெஷல் அதிகாரியா போடலாம்னு டிஸ்கஷன் நடக்குது.


அதே நேரம் கிராமத்த காமிக்கிறோம். நம்ம ஹீரோவுக்கு ஒரு பேர் வைப்போம். இம்சைராஜ் .. இம்சைராஜ் கு பத்து அண்ணன் தங்கசிங்க. பெரிய குடும்பம். அவங்க அப்பன் எந்த வேலைக்கும் போறதில்லை. சாப்பாட்டுக்கே வழியில்லை . குடும்பமே நாடு ரோட்ல நிக்குது. நம்ம இம்சைராஜ் நண்பர்களுடன் ஜாலியா அரட்டை அடிக்கிறார். போறவங்க வரவங்களை கிண்டல் பண்ணுறார். வீட்டுக்கு வந்து சாப்பாடு போடசொல்லி அவன் அம்மாவை அடிச்சு உதைக்கிறார். அடி தாங்காமல் அவங்க அம்மா மயக்கமாகிறார்.



இப்போ சீன் மாறுது. ஏன் நாம ஹீரோ இம்சைராஜ் வெள்ளை காரங்களை பிடிக்கலை அல்லது வெறுக்கிறார் என்பதற்கு ஒரு பிளாஷ்பேக் அவசியம் இல்லையா? ஒருநாள் நம்ம ஹீரோ இமசைராஜ் அவங்க அம்மா வயித்து வலியால் துடிகிறாங்க. மாத்திரை வாங்க ஒவ்வொரு ஆளிடமும் காசு கேட்கிறான். யாருமே குடுக்கலை. பிச்சை கூட கேட்டுபார்கிறான். யாருமே தரலை. சோகமாக வந்து ஒரு டீக்கடையில் உட்காருகிறான்.





அப்பொழுது ஒரு காட்சி. ஒரு அமெரிக்கன் டூரிஸ்ட் அந்த டீக்கடைக்கு வந்து ஒரு கோககோலா கூல்ட்ரிங்க்ஸ் வாங்குகிறார். அதை உடச்சு அதிலேயே மூஞ்சி கழுவி வாய் கொப்பளிக்கிறார். இதை பார்த்த நம்ம இம்சைராஜ் கடுப்பாகிறார். பெத்த தாய்க்கு மாத்திரை வாங்க காசு இல்லைன்னு நானே இருக்கும்போது நம்ம நாட்டுக்கு வந்து ஒரு வெள்ளைக்கார நாய் கோகாகோலவிலே மூஞ்சி கழுவுரானே? என்ன திமிர்? செம்ம டென்சன் ஆகி பக்கத்தில் இருந்த கோககோலா போத்தலை எடுத்து அவன் மண்டையில் ஒரே போடு. ஆள் காலி.



அதுக்கு அப்புறம் எந்த வெள்ளைகாரனை பார்த்தாலும் கொன்னுடனும் என்று ஒரே வெறி. நிறைய டூரிஸ்டுகள் இவனால் காலிபண்ண பட்டவர்கள். நிறைய சீன் காமிக்கலாம் என நினைக்கிறன். இன்னும் முடியலை. தொடரும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக